--- --:--:-- --

தனியாக செல்லும் பெண்ணுக்கு முத்தமிடும் காமுகன்

4

மும்பையில் பெண்களிடம் தொடர் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை திருட்டு வழக்கு ஒன்றில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மும்பை ரயில் நிலைய நடைமேடை மேம்பாலத்தில் தனியாகச் சென்ற பெண்ணை அத்துமீறி முத்தமிட்ட அந்த நபர் சில்மிஷம் செய்து விட்டு ஓடிய காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.

 

அந்த நபர் தொடர்ந்து பெண்களிடம் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ள நிலையிலும் திருட்டு வழக்கு ஒன்றில் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த வழக்கிலும் அந்த நபர் ஜாமீனில் விடுவிக்கப் பட்டதாக கூறப்படுகிறது.

 

பாதிக்கப்பட்ட பெண்கள் வெளிவந்து முறைப்படி புகார் அளித்தால் மட்டுமே பாலியல் அத்துமீறல் வழக்கு பதிவு செய்ய முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon