--- --:--:-- --

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வாய்ப்பில்லை

1

தற்போதுள்ள விதிமுறைகளின்படி இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வாய்ப்பில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் கோகுலகிருஷ்ணன் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

 

இதற்கு மத்திய அமைச்சர் நித்தியானந்த ராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதற்கு வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.

 

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என பல்வேறு அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், மத்திய அரசு இத்தகவலை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon