--- --:--:-- --

மாணவியின் துணிச்சலான பேச்சால் கிடைத்த பேருந்து வசதி..!

7

மதுரை அருகே கிராம சபையில் துணிச்சலுடன் பேசி பள்ளி செல்ல பேருந்து வசதி பெற்றுத்தந்த ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 

மீனாட்சிபுரம் கிராமத்தில் ஜனவரி 26ஆம் தேதி நடந்த கிராம சபைக் கூட்டத்திற்கு சக மாணவிகளுடன் வந்த சகானா என்ற மாணவி ஆறாம் வகுப்பு படிக்க ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாயாண்டி உயர்நிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டியிருப்பதாகவும், ஆனால் அதற்குப் போதிய பேருந்து வசதி இல்லை என்றும் ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் தெரிவித்தார்.

 

மாணவியின் இந்த துணிச்சலான செயல் சமூக வலைதளங்களில் பரவி பலரது பாராட்டை பெற்றது. இந்நிலையில் மாணவியின் கோரிக்கையை ஏற்று மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மாயாண்டி வழியாக மீனாட்சிபுரம் வரை பேருந்து இயக்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon