--- --:--:-- --

கல்லூரி வாசலில் தீ வைத்து கொளுத்தப்பட்ட இளம்பெண் விரிவுரையாளர்

15

மகாராஷ்டிராவில் கல்லூரி வாசல் முன்பே பெண் விரிவுரையாளர் தீவைத்துக் கொளுத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தனியார் கல்லூரியில் அங்கிதா என்ற 25 வயது இளம்பெண் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார்.

 

திங்கள்கிழமை காலை கல்லூரிக்கு நடந்து வந்து கொண்டிருந்த அங்கிதாவை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த ஒருவன் கல்லூரி முன்பு வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டு தப்பி சென்றுள்ளான்.

 

அங்கிருந்தவர்கள் இளம் பெண் மீது பற்றிய தீயை அணைத்தனர். விரைந்து வந்த போலீசார் எரிந்த நிலையில் கிடந்த இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் 40 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இதனிடைய தீ வைத்துவிட்டு தப்பி சென்றவனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே திருமணமான பெண் ஒருதலை காதல் காரணமாக பெண் விரிவுரையாளர் மீது தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon