தென்மாவட்டங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது!தங்க நகை பட்டாக் கத்திகள் பறிமுதல்
சிவகங்கை அருகே கோவானூர் கண்மாயில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரோஹித்நாதன்க்கு வந்த தகவலின் அடிப்படையில், தாலுகா காவல் ஆய்வாளர் சீராளன் தலைமையிலான தனிப்படை குழுவினர் விரைந்து சென்று அப்பகுதியில் பதுங்கி இருந்த 4 பேரை விரட்டி பிடித்தனர்.
பிடிபட்ட சண்முகநாதன், திருமுருகன், ஆனந்த் மற்றும் ரஞ்சித் ஆகிய 4 பேரிடம் நடத்திய விசாரணையின் போது குற்றவாளிகள் கடந்த ஒருவார காலமாக மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பல்வேறு வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் தென்மாவட்டங்களில் கொள்ளை வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து ஏழரை பவுன் தங்க நகை, 186 கிராம் வெள்ளிப் பொருள்கள், பட்டாக்கத்தி, இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.






