‘காக்டெயில்’ போஸ்டரில் முருகரை அவமதித்ததாக யோகிபாபு மீது போலீசில் புகார்
திரைப் பட போஸ்டரில் முருகர் கடவுளை அவமதித்ததாக நடிகர் யோகிபாபு மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்து மக்கள் முன்னணி அமைப்பின் நிறுவன அமைப்பாளர் நாராயணன் இந்த புகாரை அளித்துள்ளார்.
இதில் யோகி பாபு நடித்திருக்கும் காக்டெயில் திரைப்படத்தின் போஸ்டர் தமிழ் கடவுளான முருகனை அவமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முருகப் பெருமானின் வாகனமான மயிலுக்கு பதிலாக வெண்ணிற கிளியை இடம்பெற செய்து கிண்டல் செய்து இருப்பதாகவும் இது முருக பக்தர்கள் மற்றும் தமிழர்களின் மனதை புண்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நடிகர் யோகிபாபு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறப்பட்டுள்ளது.






