வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருக்கும் நடிகை ஷனம் ஷெட்டி!
பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளரான தர்ஷனும் பல்வேறு திரைப்படங்களில் நடித்த சனம் ஷெட்டியும் காதலித்து வந்ததாக கூறப்பட்டது. இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சமயத்தில், தர்ஷன் குறித்து வீடியோ வெளியிட்ட சனம் ஷெட்டி தம்மால் தர்சனின் வெற்றி போவதாக பலர் பேசுவதாகவும் அதனால் தனது வாழ்க்கையில் அவர் இல்லை என்றும் கண்ணீருடன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்தான் திடீரென சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வந்த சனம் ஷெட்டி தர்ஷன் தம்முடன் நிச்சயதார்த்தம் செய்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாக புகார் அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தர்ஷன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி அதிர வைத்தார்.
தமது வழியில் குறுக்கே வரக்கூடாது என தர்ஷன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சனம் ஷெட்டி தெரிவித்தார். இந்நிலையில் தியாகராயநகரில் உள்ள நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த தர்ஷன் பதிலுக்கு நடிகை சனம் ஷெட்டி மீது அதிரடி குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார்.
நடிகை சனம் ஷெட்டிக்கும் மற்றொருவருக்கும் இடையே தவறான தொடர்பு இருப்பதாகவும் அதற்கான ஆதாரம் தம்மிடம் இருப்பதாகவும் கூறிய தர்ஷன் இதன் காரணமாகவே சனம் ஷெட்டியுடன் சேர்ந்து வாழ முடியாது என்றும் தெரிவித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகரும், நடிகையும் காதலித்ததாக கூறப்பட்ட நிலையில் ஒருவர் மீது ஒருவர் அதிரடி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை விசாரணையின் முடிவில் பல்வேறு உண்மைகள் தெரியவரும் என கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




