--- --:--:-- --

கொரோனா பரவும் அபாயம்…முகமூடி ஏற்றுமதிக்கு அதிரடி தடை

9

கொரோனா வைரஸ் பாதிப்பு அபாயத்தால் உள்நாட்டின் தேவையை கருத்தில் கொண்டு என் 95 ரக முகமூடிகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. மருத்துவ உபகரண தயாரிப்பாளர்கள், தேவைக்கு ஏற்ப மட்டுமே உற்பத்தி செய்வார்கள்.

 

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்திய மருத்துவ உபகரண தயாரிப்பு நிறுவனங்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் குவிந்தன.

 

இந்நிலையில் மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் காற்றில் பரவும் நுண் கிருமிகளிலிருந்து மக்களை பாதுகாக்க பயன்படுத்தும் முகக் கவசங்களான என் 95 முகமூடி மற்றும் உடல் முழுவதும் மூடும் வகையிலான தற்காலிக மருத்துவ உடைகள் உள்ளிட்ட அனைத்து வகை நோய் முன்னெடுக்க பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon