ராமேஸ்வரம் அருகே கடலில் மிதந்து வந்த கஞ்சா பொட்டலங்கள்
ராமேஸ்வரம் அருகே கோதண்டராமர் கோயில் கடற்கரை பகுதியில் ராமேஸ்வரம் மெரைன் போலீசார் இன்று காலை ரோந்து சென்றனர். அப்போது கடல் அலையில் 3 பார்சல்கள் மிதந்து வந்தன அதனை போலீசார் எடுத்து பிரித்து பார்த்ததில் கஞ்சா இருந்தது தெரியவந்தது இதனையடுத்து 3 பார்சல்களில் தலா இரண்டு கிலோ வீதம் 6 கிலோ கஞ்சா இருந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்






