ராமநாதபுரத்தில் இரண்டு வாலிபர் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது
இராமநாதபுரம் பசும்பொன் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் அசோக்குமார் (47)2011-16 வரை சக்கரக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் இவர் ராமநாதபுரம் அதிமுக-வின் ஒன்றிய செயலாளர் இவர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வாக்கு சேகரிப்பில் சக்கரக்கோட்டை ரயில்வேகேட் பகுதியில் அதிமுகவினருடன் 2019 டிச.18 ஆம் தேதி மாலை வாக்கு சேகரித்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது, இவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட பாலமுரளி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அசோக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகளை வழிமறித்து தகராறு செய்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து போலீசில் அசோக்குமார் புகார் அளித்ததின் பேரில் 5 பேர் மீது கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கேணிக்கரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய வீரபத்திரசுவாமி கோயில் தெரு பாலசுப்ரமணி மகன் தயாநிதி 21, எம்எஸ்கே நகர் ராமு மகன் அருண்குமார் 24 ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கைது செய்ய கேணிக்கரை போலீசார் பரிந்துரைத்தனர். இதன்படி மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவுப்படி அருண்குமார், தயாநிதி இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் .






