--- --:--:-- --

45 வயதில் குழந்தை பெற்றதால் ரூ.5 லட்சத்திற்கு விற்ற தம்பதி ?

4

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு அருகே 45 வயதில் குழந்தை பிறந்ததால் அதனை ஐந்து லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த புகாரின் பேரில் தம்பதியிடம் மாவட்ட குழந்தை நல அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பெரிய கல்லூவயலை சேர்ந்த காடப்பன், செல்வி தம்பதிக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

 

இவர்களின் மகன் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். செல்விக்கு 45 வயதாகும் நிலையில் இத்தம்பதிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.இக்குழந்தையை பிறந்து நான்கு நாட்களிலேயே ஐந்து லட்சம் ரூபாய்க்கு விற்று விட்டதாக தற்போது சைல்ட்லைன் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலரிடம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

 

இதை அறிந்து அதிகாரிகள் வந்து விசாரித்தபோது குழந்தையை தத்து கொடுத்ததாகக் கூறுகின்றனர். ஆனால் சுற்றுவட்டார பகுதியில் விசாரணை நடத்தியபோது 5 லட்சம் ரூபாய்க்கு குழந்தையை விற்றது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்றபோது தம்பதி வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகினர்.

 

இதுதொடர்பாக சைல்டு லைன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் திருமயம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காடப்பன்,செல்வி தம்பதி குழந்தையுடன் புதுக்கோட்டை மாவட்டம் குழந்தைகள் நல அலுவலகத்திற்கு சென்றனர். குழந்தைகளை தாங்கள் விற்கவில்லை என்றும் தங்களிடமே குழந்தை உள்ளதாகவும் தம்பதி தெரிவித்தனர்.

 

ஆயினும் சந்தேகத்தின்பேரில் பிடித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon