36கி.மீ தூரம் கண்களைக் கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டி அசத்திய 6ஆம் வகுப்பு மாணவி
குடியரசு தினத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆறாம் வகுப்பு மாணவி கண்களை கட்டிக்கொண்டு 36 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார். முனுகப்பட்டு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி குமார், அனிதா தம்பதியின் மகள் ஸ்ருதி. அரசு பள்ளியில் படித்து வரும் இவர் உலக சாதனை நிகழ்த்த விரும்பி முனுகப்பட்டு கிராமத்திலிருந்து வந்தவாசி வரை சுமார் 36 கிலோமீட்டர் தூரம் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஒட்டி அசத்தியுள்ளார்.






