அகரம் அறக்கட்டளை விழாவில் உணர்ச்சிவசப்பட்டு அழுத நடிகர் சூர்யா
அகரம் அறக்கட்டளையில் விழாவில் பேசிய அதன் நிறுவனரும் நடிகருமான சூர்யா உணர்ச்சிவசப்பட்டு அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அகரம் அறக்கட்டளை 10 ஆண்டுகளாக கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் சென்னை சோழிங்கநல்லூரில் விழா நடத்தப்பட்டது.
அறக்கட்டளையின் நிறுவனர், நடிகர் சூர்யா அவரது தந்தை நடிகர் சிவகுமார், உழவன் அறக்கட்டளை நிறுவனரும் நடிகருமான கார்த்திக், அகரம் அறக்கட்டளை வாயிலாக மேல் படிப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய நடிகர் சிவக்குமார் திரைப்படங்களில் நடித்து கோடி கோடியாக சம்பாதித்தாலும் சூர்யாவுக்கு அகரம் அறக்கட்டளையும், கார்த்திக்கிற்கு உழவன் அறக்கட்டளையும் தான் அடையாளம் என்று பெருமிதத்துடன் கூறியிருக்கிறார். இதைத்தொடர்ந்து சூர்யா பேசினார்.
அப்போது அறக்கட்டளையை வழிநடத்தி வரும் பொறுப்பாளர் ஜெயஸ்ரீ அவரது பெற்றோர் மற்றும் மகனை மேடையேற்றி கவுரவித்தார். அவர்களுக்கு நன்றி கூறிய சூர்யா உணர்ச்சிவசப்பட்டு நா தழுதழுக்க பேசியது அங்கிருந்து வரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.






