--- --:--:-- --

குரூப்-4 தேர்வு முறைகேடு : தூத்துக்குடியைச் சேர்ந்த பயிற்சி நிறுவனத்துக்கு தொடர்பு..?

41b53b8b-8cef-416f-9b33-bb8ca4dd6b24

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் பல்வேறு திடுக் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் முன்னணி பயிற்சி நிறுவனம் ஒன்றிற்கு இந்த முறைகேட்டில் தொடர்பு என திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் சென்னை பள்ளிக் கல்வி அலுவலக ஊழியர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன் பிஎஸ்சி) மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு குரூப்-4 தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டது. சுமார் 9 ஆயிரத்து 400 காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் தேர்வில் 16 பேர் பங்கேற்றனர் தேர்வு.

 

தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம்,கீழக்கரை ஆகிய தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய பலர் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். அதிலும் முதல் 100 இடங்களில் 39 பேர் இந்த மையங்களில் எழுதியவர்கள் என்பதால் சந்தேகம் வலுத்தது. இதைத் தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி தரப்பில் விசாரணை முடுக்கி விடப்பட்டது. முடிவில் முறைகேடு நடைபெற்றது அம்பலமானது.

 

இந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. விசாரணையில் சம்பந்தப்பட்ட இரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தது. தொடர்ந்து அவர்களுக்கு வாழ்நாள் தடை விதித்ததுடன் விசாரணையை துரிதப்படுத்தியது . சிபிசிஐடி போலீசின் பிடியும் இறுகியது.

 

சிபிசிஐடி போலீசார் தமிழகம் முழுவதும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 தாசில்தார்கள் உட்பட 10 பேரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து சென்னையில் பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ரமேஷ், எரிசக்தித்துறை உதவியாளர் திருக்குமரன் மற்றும் தேர்வு எழுதிய நிதிஷ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடலூரைச் சேர்ந்த ராஜசேகர் என்ற இடைத்தரகரும் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த முறைகேட்டில் முக்கியப் புள்ளியான மேலும் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் பள்ளிக்கல்வித் துறை தலைமை அலுவலகத்தில் ஆவணக் காப்பாளராக பணிபுரியும் ஓம்காந்தன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் குரூப் 4 தேர்வுப் பணியில் ஈடுபட்டு, ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு விடைத்தாள்கள் கொண்டு வரப்பட்ட வேனில் பயணித்துள்ளார். வேனில் வந்த மற்றவர்கள் வழியில் உணவு சாப்பிட வேனை நிறுத்தியுள்ளார். அப்போது வேனில் இருந்த விடைத்தாள்களை மாற்றியதில் ஓம்காந்தன் முக்கியப் பங்கு வகித்தது அம்பலமானது. இதைத் தொடர்ந்து ஓம் காந்தனை கைது செய்த போலீசார், அவருடைய லீட்டிலும் சோதனை நடத்தினர்.

 

இந்த குரூப் 4 தேர்வு முறைகேட்டில் தூத்துக்குடியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் முன்னணி பயிற்சி நிறுவனம் ஒன்றுக்கு தொடர்பு உள்ளதாக இப்போது தகவல் Nவெளியாகியுள்ளது. இந்த நிறுவனத்துக்கு ராமநாதபுரத்திலும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு பிடிபட்ட 99 பேரில் பலரும் இந்த மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே வங்கி தேர்வில் நடைபெற்ற முறைகேட்டிலும் இந்த நிறுவனம் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது. இதனால் சிபிசிஐடி போலீசார், சம்பந்தப்பட்ட பயிற்சி நிறுவனத்தை குறி வைத்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon