ராமநாதபுரம் அருகே பேராவூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
ராமநாதபுரம் அருகே பேராவூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி மாரிமுத்து தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் கா.மனோகரன் முன்னிலை வகித்தார்.
இக்கிராம சபை கூட்டத்தில் பிரதமரின், இலவச வீடு, முதியோர் ஓய்வூதியம், அம்மா இரு சக்கர வாகன திட்ட பயனாளிகள் தேர்வு, மழைநீர் சேகரிப்பு, சாலை பராமரிப்பு, முதல்வரின் குடிமராத்து திட்டம், குறுங்காடு மேம்பாட்டு திட்டம் நிறைவேற்றுதல் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் ஊராட்சி செயலர் ச.ஆனந்தி நன்றி கூறினார். ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




