போக்குவரத்து விதிமுறையை மீறிய இளைஞருக்கு நூதன தண்டனை
மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இளைஞருக்கு நூதன முறையில் நீதிபதி தண்டனை அளித்த சம்பவம் திருச்சியில் அரங்கேறியுள்ளது.
சாலையில் போக்குவரத்தை சரி செய்யும் இவர் போக்குவரத்து காவலர் அல்ல, தான் செய்த தவறுக்காக கிடைத்த தண்டனையாக இந்த பணியை செய்து வருகிறார். இந்த இளைஞர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நண்பருடன் சேர்ந்து மதுபோதையில் வாகனத்தை ஓட்டியதால் பாலமுருகன் என்பவருக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்ததுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்நிலையில் நீதிமன்ற நீதிபதி உத்தரவின் பேரில் இரண்டு தினங்களுக்கு மாநகர காவலர்களுடன் இணைந்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.






