5.9 கிலோ எடையுடன் பிறந்த குழந்தை- மருத்துவர்கள் அதிர்ச்சி
பெங்களூருவில் 5 கிலோ 900 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை ஒன்று பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள வாணி விலாஸ் அரசு மருத்துவமனையில் கடந்த 18ஆம் தேதி காலையில் 5 கிலோ 900 கிராம் எடையுடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
டார்ஜிலிங்கில் பூர்வீகமாக கொண்ட யோகேஷ் மற்றும் சரஸ்வதி தம்பதிக்கு இந்த குழந்தை பிறந்துள்ளது. கர்ப்பகாலத்தின் போது சரஸ்வதி 80 கிலோ எடை கொண்டிருந்ததால் இரட்டை குழந்தைகள் இருப்பதாக மருத்துவர்கள் கருதியுள்ளனர்.

ஆனால் 5 கிலோவுக்கு அதிகமான எடையுடன் குழந்தை பிறந்தது தங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய தாகவும் அப்பகுதியில் அதிக எடையுடன் பிறந்த குழந்தை இதுதான் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். சரஸ்வதிக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கும் நிலையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு அறுவை சிகிச்சை மூலம் இந்த குழந்தை பிறந்துள்ளது.






