--- --:--:-- --

நிர்பயா பாலியல் வழக்கு : மரணதண்டனைக்கு கெடு – உச்சநீதிமன்றத்தில் மனு

12

நிர்பயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகள் மீண்டும் மேல்முறையீடு செய்து இருப்பதால் அவர்களின் மரண தண்டனையை நிறைவேற்றும் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுபோல் மேல்முறையீடுகள் காரணமாக தண்டனை ஒத்தி வைக்கப்படுவதை தவிர்க்க புதிய விதிகளை வகுக்கும் படி உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

 

குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளித்து குற்றவாளிகள் விண்ணப்பிக்க ஏழு நாட்கள் மட்டும் அவகாசம் அளிக்கப்பட வேண்டுமென உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது. குற்றவாளியின் கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டால் விரைவாக தண்டனையை நிறைவேற்ற மாநில அரசும், சிறை அதிகாரிகளும் ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.

 

குற்றவாளிக்கான சட்ட உரிமையை பாதுகாக்க வேண்டிய அவசியம் இருந்தபோதும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விரைவாக நீதி கிடைப்பது முக்கியமானது என்று அரசு தனது மனுவில் தெரிவித்துள்ளது. கொடிய கொடூரமான முறையில் குற்றம் புரிந்தவர்கள் மீது அளவிற்கதிகமான கருணை காட்ட முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

இதற்கான வழிகாட்டல்களை வகுத்து தருமாறும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. குற்றவாளிகள் சட்டத்துடன் விளையாடக்கூடாது என்றும் உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த மனுவில் திட்டவட்டமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon