மங்களூரு விமானநிலையத்தில் வெடிகுண்டு வைத்த ஆதித்ய ராவை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்
கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்ததாக மங்களூருவில் சரணடைந்த ஆதித்யராவ் விசாரணைக்காக பெங்களூருவுக்கு அழைத்து வரப்பட்டார். மங்களூர் விமான நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வெடிகுண்டு வைத்ததாக 36 வயதான ஆதித்யராவ் பெங்களூரு காவல் துறையிடம் சரணடைந்தார். அவர் வெடிகுண்டை தயாரிக்க தேவையான பொருட்களை ஆன்லைனில் வாங்கியதாக கூறிய காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் மங்களூருவிற்கு அழைத்துவரப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.






