--- --:--:-- --

வசூல் சாதனை படைத்த “தர்பார்” : நடிகர் ராகவா லாரன்ஸ் ட்விட்டரில் பதிவு

6.1

நடிகர் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள தர்பார் திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்துள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தர்பார் படம் ஓடாது என நினைத்து ஒரு தரப்பினர் சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்பி வருவதாகவும், ஆனால் இதனை பொய்யாக்கும் விதமாக தர்பார் படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலை சாதனை படைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இலையை கையில் மறைக்கலாம் என்றும், ஆனால் மலையை மறைக்க முடியாது எனவும் அண்ணாமலை ஆண்டவனே நம்ம பக்கம் எனவும் ராகவா லாரன்ஸ் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon