--- --:--:-- --

நெறியற்ற வகையில் மருத்துவர்களை தூண்ட வேண்டாம்-மோடி

12

மருத்துவர்களுக்கு பலவிதத்தில் ஆசைகாட்டி மருந்து விற்கும் பாணியை நிறுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை களுக்கு ஆளாக நேரிடும் என்று மருந்து தயாரிப்பு நிறுவனங்களை பிரதமர் மோடி எச்சரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

பெண், பொன், விளையாட்டு உல்லாச பயணங்கள், விலை உயர்ந்த பரிசுகள் என மருத்துவர்களுக்கு சலுகைகளை அளித்து வியாபாரத்தைப் பெருக்கும் நுட்பத்தை பல மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் காலங்காலமாக பின்பற்றுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சைடுஸ்கேடிலா, டொரன் பார்மஸ்யூட்டிகள் உள்ளிட்ட முன்னணி மருந்து நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தனர்.

 

அப்போது இது குறித்து அரசின் கவலையை வெளியிட்ட மோடி நெறியற்ற வகையில் மருத்துவர்களை தூண்டி வியாபாரம் செய்யும் மருந்து நிறுவனங்களை சட்டரீதியாக தண்டிக்கும் வழிகள் பற்றிய ஆராயுமாறு சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகத்திற்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon