--- --:--:-- --

இலங்கைக்கு எதிராக கெத்து காட்டிய இந்தியா..! டி20 தொடரை வசமாக்கியது!!

IMG-20200111-WA0039

இலங்கைக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் 2-0 என கைப்பற்றி சாதித்துள்ளது.

 

இந்தியா வந்துள்ள மலிங்கா தலைமையிலான இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது.முதல் போட்டி மழையால் ரத்தானது. இந்தூரில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இதனால் தொடரில் முன்னிலை பெற்றது.

 

3-வது மற்றும் கடைசி போட்டி, புனேவில் நேற்றிரவு நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்களை குவித்தது. இந்தியத் தரப்பில் லோகேஷ் ராகுல் (54), தவான் (52) அரைசதம் அடித்து சாதித்தனர். கோஹ்லி (26), தாகூர் (22) கைகொடுக்க இந்தியா 201 ரன்களை குவித்தது.

 

தொடர்ந்து ஆடிய இலங்கை அணி, இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கத்திலேயே முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த அணியை, தனஞ்செய டி சில்வாவும் (57) மாத்யூஸும் ஓரளவுக்கு மீட்டனர். ஆனால் அணியின் ஸ்கோர் 94 ஆக இருந்த போது மாத்யூஸ் அவுட்டாக, அதன்பின் இலங்கை . அணி மீண்டும் ஆட்டம் காண ஆரம்பித்தது.

 

அடுத்து 30 ரன்கள் சேர்ப்பதற்குள் எஞ்சிய 5 விக்கெட்டுகளும் மளமளவென சரிய, 15.5 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 78 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இலங்கை தரப்பில் டி சில்வா (57), மாத்யூஸ் (31) தவிர்த்து மற்ற 8 வீரர்களும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.

 

இந்த வெற்றியின் 2020-ம் ஆண்டின் புத்தாண்டு பரிசாக டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது இந்தியா. தொடர் நாயகன் விருதை நவ்தீப் சைனியும், ஆட்ட நாயகன் விருதை ஷர் குல் தாகூரும் தட்டிச் சென்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon