ஒரே மேடையில் இன்று மோடியுடன் மம்தா பானர்ஜி பங்கேற்பு
இரண்டு நாள் பயணமாக கொல்கத்தா வரும் பிரதமர் மோடி மேற்குவங்கம் முதலமைச்சருடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார். பாரம்பரியமிக்க பழமை வாய்ந்த கட்டிடங்களை புதுப்பிக்கும் திட்டத்தின்கீழ் கரன்சி கட்டிடம், மெல்பர்னி ஹவுஸ், மெட் காஃபி ஹவுஸ் மற்றும் விக்டோரியா மெமோரியல் அரங்கு ஆகியவை புதுப்பிக்கப்பட்டு நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளன.
கொல்கத்தா துறைமுகத்தில் 150 வது ஆண்டு விழாவில் அவர் மம்தா பானர்ஜி உடன் ஒரே மேடையில் பகிர்ந்து கொள்கிறார். பிரதமர் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொல்கத்தாவின் பிரசித்தி பெற்ற ஹவுரா பாலம் வண்ண மின் விளக்குகளால் ஒளி வீசியது.






