--- --:--:-- --

80வது பிறந்தநாளை கொண்டாடும் கே.ஜே.யேசுதாஸ்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து

16

எண்பதாவது பிறந்தநாளை கொண்டாடும் கானகந்தர்வன் குரலோன் யேசுதாசுக்கு பிரதமர் நரேந்திரமோடி , கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். டுவிட்டரில் வாழ்த்து கூறி இருக்கும் பிரதமர் மோடி பன்முகத்தன்மை கொண்ட யேசுதாஸ் தனது குரலால் அனைத்து வயதினர் மத்தியில் பிரபலமானவர் என்று புகழ்ந்துள்ளார்.

அவர் இந்திய கலாச்சாரத்திற்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை செலுத்தி இருக்கிறார் என்று மோடி குறிப்பிட்டார். யேசுதாஸ் நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துவோம் என பிரதமர் கூறியுள்ளார்.

 

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் டுவிட்டரில் வெளியிட்டு இருக்கும் பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் யேசுதாசுக்கு இனிவரும் காலங்களும் மகிழ்ச்சியும், வெற்றியும் நிறைந்ததாக இருக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 1961 ஆம் ஆண்டு பாடகராக அறிமுகமான கே ஜே யேசுதாஸ் 25,000 திரைப்பட பாடல்கள் உட்பட சுமார் 80 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon