தலைமுடியை விற்று குழந்தைகளின் பசியை போக்கிய பாசத் தாய்

தனது தலைமுடியை விற்று அதில் கிடைத்த பணத்தால் குழந்தைகளின் பசியைப் போக்கிய பெண்ணிற்கு மாதாந்திர உதவித்தொகை கிடைக்கும் வகையில் சேலம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

 

வீமனுரை சேர்ந்த செல்வம் என்பவர் தொடங்கிய செங்கல்சூளை நஷ்டம் அடைந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கணவர் பெற்ற கடனை அடைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட அவரது மனைவி பிரேமா செங்கல் சூளை ஒன்றில் கூலி வேலை செய்து வந்தார்.

 

உடல்நிலை பாதிப்பால் வேலைக்கு செல்லாத பிரேமாவிடம் அன்றைய தினம் குடும்ப செலவுக்கான பணம் இல்லை. இதனால் தலை முடியை விலைக்கு வாங்குபவரிடம் மொட்டை அடித்துக் கொண்டு தலை முடியை 150 ரூபாய்க்கு விற்று உணவு தேவையை பூர்த்தி செய்தார். இந்த தகவலை அறிந்த மாவட்ட நிர்வாகம் பிரேமாவிற்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்துள்ளது.


Leave a Reply