கோவை ஆர்.எஸ்.புரம் கென்னடி திரையரங்கம் அருகே இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூபாய் 1000 ரொக்கமாக வழங்கினார்.இதில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்டத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு நன்றியினை தெரிவித்தார்.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்டத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் வழங்கி இருக்கின்றார்.
கோவை மாவட்டத்தில் மட்டும் 130 கோடி ரூபாய் பொங்கல் பரிசாக கொடுத்து இருக்கின்றனர் என தெரிவித்தார்.
மேலும்,நகர் புற உள்ளாட்சி தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் எனவும்,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய அளவிற்கு ஆதரவு அ.தி.மு.க – விற்கு இருக்கும் எனவும்,கோவை மாவட்டம் அம்மாவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளோம் எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.