--- --:--:-- --

ஜேஎன்யு மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்! டி.ராஜா கண்டனம்

7

மக்களின் கருத்தை பாரதிய ஜனதா ஏற்க தயக்கம் காட்டுவதால் பிரச்சனை எழுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி ராஜா தெரிவித்திருக்கிறார்.

 

ஜே என் யூ பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவிப்பதாக கூறிய அவர், மக்கள் தங்களின் கருத்துக்களை கூறுவது ஜனநாயக கடமை என்று கூறினார். ஜே என் யூ மாணவர்கள் மீதான தாக்குதல் ஜனநாயகத்துக்கு எதிரான செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்துக்காக குரல் கொடுப்பது மக்களின் உரிமை என்றும். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இதை புரிந்து கொள்ளவில்லை என்றும் மக்களின் கருத்துக்களை அரசு ஏற்க மறுக்கும் போது பிரச்சனை எழுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon