--- --:--:-- --

புத்தாண்டு அன்று அமலுக்கு வந்தது ரயில் கட்டண உயர்வு!

2

நாடெங்கும் ரயில் கட்டணங்கள் நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளன. சாதாரண ரயில்களில் கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி இல்லாத விரைவு ரயில் கட்டணம் கிலோமீட்டருக்கு 2 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

 

குளிர்சாதன வகுப்புக்கு கிலோமீட்டருக்கு 4 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. சஜாதி, ராஜ்கானி ரயில்களுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிவிரைவு ரயில், டிக்கெட் முன்பதிவு கட்டணங்களில் மாற்றமில்லை என்றாலும் ஏற்கனவே முன்பதிவு செய்த டிக்கெட்களுக்கு கட்டண உயர்வு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் புறநகர் ரயில் மற்றும் சீசன் டிக்கெட்டுகளுக்கு கட்டணத்தில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. 5 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon