--- --:--:-- --

சமூக வலைதளங்களில் சி‌ஏ‌ஏ வுக்கு ஆதரவு திரட்டும் பாஜக

6

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் சமூக வலைதளங்கள் மூலமாக அதற்கு ஆதரவு திரட்டும் வகையிலான பரப்புரையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்தியா சப்போர்ட் சி ஏ ஏ என்ற பெயரில் ஹேஸ் டேக்கை உருவாக்கி சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசிய காணொளியை பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டிருக்கும் டுவிட்டர் பதிவில் குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக மேலும் கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ள ஜக்கிவாசுதேவ் அளித்திருக்கும் அருமையான விளக்கத்தைக் கேளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

 

நமது சகோதரத்துவ கலாச்சாரம் தொடர்பான ஜக்கிவாசுதேவ் அறிவுப்பூர்வமாக விளக்கி இருப்பதாகவும், சட்டத் திருத்தம் தொடர்பாக தவறான கருத்துகளை அவர் கலைந்து இருக்கிறார் என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். மேலும் பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டரிலும் குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக தனியாக விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

 

அதில் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டதாகவும் நாட்டில் வாழும் குடிமக்களின் குடியுரிமையை பறிப்பதற்காக கொண்டுவரப்படவில்லை என்றும் தெளிவுப்படுத்தியிருக்கிறார். மேலும் இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியும் நமோ செயலில் இருந்து தரவிறக்கம் செய்து சட்டம் தொடர்பான விளக்கங்கள் கிராபிக்ஸ் மற்றும் காணொளிகளை பகிர வேண்டும் என்றும் பிரதமரின் டுவிட்டர் பதிவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

பாரதிய ஜனதாவின் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவும் ஜாக்கி வாசுதேவின் வீடியோவை பகிர்ந்து இளைஞர்கள் அனைவரும் இதனை காண வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon