டெல்லியில் 119 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் குளிர்! கடும் அவதியில் மக்கள்..!

தலைநகர் டெல்லியில் 119 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் குளிர் வாட்டி வருகிறது. டெல்லியில் உள்ள பெரும்பாலான இடங்களில் 4 டிகிரி செல்சியஸ்க்கும் குறைவான வெப்பநிலை நிலவுகிறது. சாலைகளில் போக்கு வரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

 

கடுமையான பனி மூட்டம் காரணமாக 500க்கும் மேற்பட்ட விமானங்கள் டெல்லியிலிருந்து தாமதமாக புறப்பட்டன. 21 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. கடும் குளிரால் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. கணிசமான ரயில்கள் தாமதமாகவும், மாற்றுப்பாதையிலும் இயக்கப்பட்டன.

 

டெல்லியில் உள்ள காற்றுதரக்குறியீடு சுவாசிக்க ஏற்றவாறு இல்லாததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். காற்றின் தர குறியீட்டு எண் டெல்லியில் 448 ஆகவும், பரிதாபாத்தில் 459 ஆகவும், நொய்டாவில் 464 ஆகவும் நிலவுகிறது.


Leave a Reply