மாணவிகள் மது அருந்தும் வீடியோ வெளியானதால் அவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கம்
நாகை மயிலாடுதுறையில் கல்லூரி மாணவிகள் மது அருந்தும் வீடியோ வெளியானதை அடுத்து அவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தர்மபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் சீருடை அணிந்திருந்த 3 மாணவிகள் சீருடையில் இல்லாத ஓர் இளம் பெண் ஆகியோர் மற்றொரு இளைஞருடன் சேர்ந்து மது அருந்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
தகவலறிந்த கல்லூரி நிர்வாகம் கல்லூரியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக 4 மாணவிகளையும் கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்க உத்தரவிட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




