காங்கிரஸ் கட்சிக்கு இன்று 135ஆவது பிறந்த தினம்
காங்கிரஸ் கட்சி தனது 135 ஆவது நிறுவன தினத்தை இன்று கொண்டாடுகிறது. இதனையொட்டி அரசமைப்பு சட்டத்தை காப்போம் இந்தியாவை காப்போம் என்ற பெயரில் நாடெங்கும் கொடி அணிவகுப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அக்கட்சி திட்டமிட்டிருக்கிறது.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெறும் நிறுவன நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமை வகித்து கொடியேற்ற இருக்கிறார். அதேபோன்று அசாம் மாநிலம் கவுகாத்தியில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நடைபெறும் பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடக்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொள்ளவுள்ளார். சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் மூவர்ண கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற இருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




