--- --:--:-- --

நித்யானந்தா கடத்தியதாக சொல்லப்படும் பெண்கள் எங்கே?

1

நித்யானந்தா கடத்தி சென்றதாக கூறப்படும் பெண்கள் எந்த நாட்டில் இருக்கிறார்கள் என்று இந்திய தூதரகத்திடம் இருந்து தகவல் பெற்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று குஜராத் காவல்துறைக்கு அகமதாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

 

பெங்களூருவை சேர்ந்த ஜனார்த்தன சர்மா தனது 2 மகள்களை நித்யானந்தா கடத்தி சென்று விட்டதாக அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனுவை விசாரித்து வரும் அகமதாபாத் உயர்நீதிமன்றம் ஜனார்த்தனா ஷர்மாவின் மகள்கள் எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் தங்கியிருக்கும் நாட்டிலிருக்கும் இந்திய தூதரகத்திடமிருந்து தகவல் பெற்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் குஜராத் காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

 

வரும் ஜனவரி மாதம் 11ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon