--- --:--:-- --

கிறிஸ்தவ மத உணர்வுகளை அவமதித்ததாக நடிகை ரவீணா டாண்டன் மீது புகார்

7

கிறிஸ்துவ மத உணர்வுகளை அவமதித்ததாக நடிகை ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் மீது பஞ்சாப் மாநில போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

கிறிஸ்துமஸ் தினத்தன்று ஒளிபரப்பான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரவீனா டாண்டன், இயக்குனர் ஃபரா கான், நகைச்சுவை நடிகர் பாரதி சிங் கிறிஸ்துவ மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் விமர்சனங்களை மேற்கொண்டதாக தொடர்புடைய நிகழ்ச்சியின் வீடியோ ஆதாரத்துடன் அஜுனால் நகர கிறிஸ்துவ முன்னணி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

 

இதையடுத்து மத நம்பிக்கைகளை அவமதித்தல் என்ற பிரிவின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon