இசையமைப்பாளர் இளையராஜவுக்கு ‘ஹரிவராசனம்’ விருது

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் ஜனவரி 15ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

 

மத நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்கியதாக இந்த விருது வழங்கப்படுவதாக கேரள அரசு கூறியிருக்கிறது. இத்துடன் வோர்ஷிப்பில் மியூசிக் ஜீனியஸ் என்ற பட்டமும், ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply