இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது ஏன்? – சரத் பவார்
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை சட்டத் திருத்தத்தில் குடியுரிமை மறுக்கப்பட்டது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் குடியுரிமை சட்டத் திருத்தம் மதத்தையும், சமூக ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் பாதிப்பதாக விமர்சித்தார். நாட்டின் ஒற்றுமைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டவர்கள் தான் குடியுரிமை சட்டத் திருத்தத்தையும் தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் எதிர்ப்பதாக சரத்பவார் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் முக்கியமான பிரச்சினைகளை திசை திருப்பும் வகையில் குடியுரிமை சட்டத் திருத்தமும் தேசிய குடிமக்கள் பதிவேடும் கொண்டுவரப்பட்டு இருப்பதாக சரத்பவார் கடுமையாக சாடினார்.






