--- --:--:-- --

“ரஜினியை பார்த்து திமுக,அதிமுகவுக்கு கலக்கம்”:தமிழருவி மணியன்

4

ரஜினி எப்போது அரசியல் கட்சியை தொடங்கினாலும் அப்போதே தமிழகத்தில் ஆளும் இடத்தை நோக்கி செல்ல கூடிய சக்தியாக திகழ்வார் என காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

 

மதுரை விமான நிலையத்தில் தமிழருவி மணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் குடியுரிமை சட்டம் மிகவும் அவசியம் என்றும், ஆனால் அது மத ரீதியாக அல்லாமல் மனிதத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் ரஜினி எதைக் கூறினாலும் அதை எதிர்க்க ஒரு கூட்டம் இருப்பதாகவும், திமுக, அதிமுக மற்றும் பல கட்சிகள் ரஜினியை பார்த்து கலக்கம் அடைகிறார்கள் என்றும் தமிழருவி மணியன் கூறினார்.

Leave a Reply

Right Menu Icon