--- --:--:-- --

பிரச்னைகளுக்கு வன்முறை தீர்வாகாது என்ற ரஜினி…! போராடும் மாணவர்களை கொச்சைப்படுத்துவதா? சீமான் ஆவேசம்!!

IMG_20191220_111733

எந்த பிரச்னைக்கும் தீர்வு காண வன்முறை தீர்வாகாது என குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஜினிக்கு, மாணவர்கள் போராட்டத்தை இதை விட கொச்சைப்படுத்த முடியாது சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமாகியுள்ளன. டெல்லி, லக்னோ, மங்களூரு என பல இடங்களில் பல இடங்களில் வன்முறை வெடித்து கலவரக் காடாக மாறியுள்ளது. போராட்டங்களை கட்டுப்படுத்த 144 தடையுத்தரவு, இணைய சேவை முடக்கம் என பல பகுதிகளில் மத்திய அரசும், மாநில அரசுகளும் அடக்கு முறைகளை கையாள்வதால் போராட்டம் நாளுக்கு நாள் வெகு தீவிரமாகி வருகிறது.

இப்படி எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், குடியுரிமை சட்டம் குறித்து சூப்பர் ஸ்டார் கருத்து எதுவும் தெரிவிக்காமல், சில நாட்களாக அமைதி காத்து வந்தார். மும்பையில் தர்பார் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவரிடம் கேட்டபோது கூட, கருத்துக் கூற இது சரியான தருணமில்லை என்று கூறிவிட்டார். இந்நிலையில், ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது கூறியது போல், பிரச்னைக்கு வன்முறை தீர்வாகாது என டுவிட்டரில் ரஜினி பதிவிட்டுள்ளது இப்போதும் பெரும் சர்ச்சையாகியுள்ளது.

 

ரஜினி தனது ட்விட்டர் பதிவில், எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது.தேச பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதில் மிகவும் வேதனை அளிக்கிறது என்று ரஜினி பதிவிட்டுள்ளார்.

ரஜினியின் இந்தக் கருத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கண்டனம் தெரிவித்துள்ளார். அடக்கு முறையையும்ஒடுக்குமுறையையும் மீறி போராடும் மக்களையும், மாணவர்களையும் இதைவிட யாரும் கொச்சைப்படுத்தி விட முடியாது  .வன்முறை செய்தது யார்? குடியுரிமை சட்டத் திருத்தத்தை நீங்கள் ஏற்கிறீர்களா? அல்லது எதிர்க்கிறீர்களா? என்றும் சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இதற்கிடையே ரஜினியின் இந்தக் கருத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலரும் டுவிட்டரில் பதிவிட்டு வருவதால், ரஜினி விவகாரம் தேசிய அளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon