--- --:--:-- --

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முழக்கம்

6

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்த போலீசார் தடை விதித்து இருந்தனர்.

 

எனினும் அதனை மீறி தடுப்புகளை தகர்த்தெறிந்து முன்னேற முயன்றதால் போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட அனைவரையும் போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் போர்க்களம் போல் காட்சியளித்தது.

 

டெல்லியில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட இடதுசாரி கட்சி தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.

 

போராட்டங்கள் தீவிரம் அடைந்ததால் டெல்லியில் பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்களின் வாயில்கள் மூடப்பட்டன. மேலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் எதிரொலியாக குருகிராம் டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon