--- --:--:-- --

குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேறும் வரை போராடுவேன்

9

தன் மகள் நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்தவர்களை வரும் 16ஆம் தேதிக்குள் தூக்கிலிட வேண்டும் என்று அவரது தாய் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

 

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட 4 குற்றவாளிகளில் ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது வரும் 17ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

 

இந்நிலையில் 4 குற்றவாளிகளின் மரண தண்டனையை விரைந்து செயல்படுத்த கோரி நிர்பயாவின் பெற்றோர் டெல்லி அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதை ஏற்ற நீதிபதிகள் 4 குற்றவாளிகளில் ஒருவர் சீராய்வு கோரி உச்சநீதிமன்றத்தை அணுகி உள்ளதால் அதில் 17ஆம் தேதி வரும் முடிவின் அடிப்படையில் நிர்பயா பெற்றோரின் மனுவை 18ஆம் தேதி விசாரிப்பதாக கூறினார்.

 

இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய நிர்பயாவின் தாய் தன் மகளின் மரணத்திற்கு காரணமானவர்களை மரணதண்டனை நிறைவேற்றப்படும் வரை போராடப் போவதாக தெரிவித்திருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon