நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஏழாம் வகுப்பு மாணவர் தொண்டை அடைப்பான் நோய் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த தொ ஜேடர் பாளையம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் நாமகிரிப்பேட்டை பகுதியில் போட்டோ ஸ்டுடியோ கடையை நடத்தி வருகிறார். இவரது மகன் ஸ்ரீசங்கரர் திருச்சியில் உள்ள குருகுலம் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவர்களுக்கு சளி காய்ச்சல் பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டதையடுத்து பள்ளி நிர்வாகம் அவரை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். இதையடுத்து ராசிபுரம் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் மாணவரை பெற்றோர் சேர்த்துள்ளனர்.
மருத்துவர்கள் சோதனையில் மாணவருக்கு தொண்டை அடைப்பான் நோய் தாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து சிகிச்சை பலனின்றி மாணவன் ஸ்ரீசங்கரர் உயிரிழந்தார். மாணவரின் ஸ்ரீசங்கரர் பிறந்தபோது பெற்றோர் தடுப்பூசி போடுவதை உயிரிழப்புக்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.