திருப்பதி கோயிலில் லாரி சக்கரத்தில் விழுந்து பக்தர் தற்கொலை
திருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பு பக்தர் ஒருவர் லாரிக்குள் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் பரபரப்பு வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பால், காபி போன்ற பானங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
இதற்காக இன்று அதிகாலை அன்னதான கூடத்தில் இருந்து லாரி ஒன்றின் மூலம் கோவில் எதிரே உள்ள மண்டபத்திற்கு பால் மற்றும் உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் லாரியின் பின் சக்கரத்தில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.
இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. லாரி சக்கரத்தில் விழுந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து ஓட்டுனர் மற்றும் கிளீனர் பதறிஅடித்தபடி அந்த நபரை மீட்டனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து உடலை மீட்ட போலீசார் அந்த நபர் தமிழகத்தை சேர்ந்தவரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




