--- --:--:-- --

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் : உடனடியாக சட்டம் அமலுக்கு வந்தது!!

sd

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறிய நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து உடனடியாக சட்டம் அமலுக்கு வந்தது.

 

ஆப்கன், வங்கதேசம், பாகிஸ்தான் நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய, இஸ்லாமியர்கள் தவிர்த்த பிற மதத்தினருக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் வகையில், மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்தது. இந்த மசோதாவுக்கு,நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அசாம், மணிப்பூர், மேகாலயா போன்ற வட கிழக்கு மாநிலங்களில் பெரும் போராட்டங்களும் நடைபெற்று கலவர பூமியாகி உள்ளது.

 

ஆனாலும், மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அடுத்தடுத்து இந்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்ததால் சூடான விவாதங்கள் நடைபெற்றன.

மக்களவையில் ஆளும் பாஜகவுக்கு மெஜாரிட்டி பலம் இருந்ததால் இந்த மசோதா எளிதாக நிறைவேறியது. மாநிலங்களவையில் பாஜகவுக்கு போதிய பலம் இல்லாததால், மசோதா நிறைவேறுமா என்ற சந்தேகம் நிலவியது. அதிமுக, தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பிக்கள் ஆதரவாக ஓட்டளித்ததால் அங்கும் மசோதா நிறைவேறி விட்டது. அதிமுகவின் 11 எம.பி.க்கள் எதிர்த்து ஓட்டளித்திருந்தால் மசோதா தோல்வியடைந்திருக்கும்.

 

எனவே நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேறிய நிலையில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து விட்ட நிலையில், உடனடியாக சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon