வார்டு உறுப்பினர் பதவிக்கு இரவு நேரத்தில் நடந்த ஏலம்!
திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஏலம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொட்டியம் தாலுகா அரசலூர் கிராமத்தில் நான்காவது வார்டு உறுப்பினர் பதவிக்கு மாரியம்மன் கோவிலில் இரவு நேரத்தில் ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் அதிக தொகை கொடுப்பவர்களுக்கு வார்டு உறுப்பினர் பதவி அறிவிக்கப்பட்டது.2 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தவர்கள் வார்டு உறுப்பினர் பதவியை ஏலம் எடுத்தனர். இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்ததால் தகராறு ஏற்பட்டது. தொட்டியம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஏலத்தில் ஈடுபட்டவர்களை எச்சரித்து அனுப்பினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




