பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்வெளி பயணம்!
பிஎஸ்எல்வி ராக்கெட் விண்வெளி பயணத்தில் நேற்று அரைசதம் கண்டது. போலார் சாட்லைட் லான்ச் வெகிக்கள் என்பதன் சுருக்கமே பிஎஸ்எல்வி. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் பிரத்தியேக தயாரிப்பு இந்த ராக்கெட்.
ஒவ்வொரு முறை விண்ணில் செலுத்த பிஎஸ்எல்வி தயாரிப்புக்கு ஆகும் செலவு 130 முதல் 200 கோடி ரூபாய். இதன் உயரம் 44 மீட்டர் அதாவது 144 அடி, சுற்றளவு 2.8 மீட்டர், எடை 295 முதல் 320 டன்கள் வரை. 1993 ஆம் ஆண்டு முதலில் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று 50ஆவது முறையாக விண்ணில் ஏவப்பட்டு செயற்கைக்கோள்களை சுமந்து சென்றுள்ளது.
சந்திரயான், செவ்வாய், ஆஸ்ட்ரோஷாட்,எஸ்ஆர்இ-1, நாவிக்ஆகிய முக்கிய விண்கலங்கள் செயற்கைக்கோள்களை ஏந்தி விண்ணில் பாய்ந்த பெருமை கொண்டது பிஎஸ்எல்வி. இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் இணைந்து வெள்ளிவிழா கடந்துள்ள பிஎஸ்எல்வி விண்ணில் பாய்வதை பொன் விழா காண்கிறது.
இதுவரை 50 முறை செயற்கைக்கோள்கள், விண்கலங்களை சுமந்து கொண்டு விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை 47 முறை வெற்றியும் தோல்வியும் ஒரு பகுதியளவு வெற்றியும் பிஎஸ்எல்வி வரலாறு. விண்ணில் பாயும் தேர்வில் 96 சதவீத மதிப்பெண்களைப் பெற்ற பிஎஸ்எல்வி முதலில் டி என்ற வரிசையில் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
1997 ஆம் ஆண்டு முதல் சி வரிசைக்கு மாறிய இஸ்ரோ இன்றுவரை அதே வரிசையில் ராக்கெட்டுகளை ஏவி வருகிறது. தனது விண்வெளி திட்ட வரிசையில் சி13 என்ற எண்ணை மட்டும் இஸ்ரோ கைவிட்டது .அதிகபட்சமாக 2016இல் 20 செயற்கைக்கோள்களை விண்ணில் சுமந்து சென்ற பெருமையும் பிஎஸ்எல்விக்கு உண்டு.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




