--- --:--:-- --

தி.நகரில் ஓடும் பேருந்தில் அடிபட்டு மாணவன் உயிரிழப்பு

1

சென்னை தியாகராய நகரில் ஓடும் பேருந்தில் இருந்து இறங்கி ஏழாம் வகுப்பு மாணவர் சக்கரத்தில் சிக்கி பலியானார்.வேளச்சேரியை சேர்ந்த குமார் என்பவரின் மகனான சரண் தி நகரில் உள்ள பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான்.

 

வீட்டிலிருந்து பள்ளிக்கு சரண் மாநகரப் பேருந்தில் தான் சென்றுள்ளார்.தி நகர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது ஓடும் பேருந்திலிருந்து சரண் உள்ளிட்ட சில மாணவர்கள் இறங்கியதாக கூறப்படுகிறது. அப்போது கால் தவறி கீழே விழுந்து சரண் மீது பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறியதில் நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

Leave a Reply

Right Menu Icon