--- --:--:-- --

வெங்காயம் பரிசுப்பையை தொண்டர்களுக்கு வழங்கிய நாராயணசாமி

13

புதுச்சேரியில் நடைபெற்ற சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் தொண்டர்களுக்கு முதல்வர் நாராயணசாமி வெங்காயம் அடங்கிய பரிசு பையை வழங்கினார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 73வது பிறந்த நாள் விழா புதுச்சேரியில் உள்ள மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

 

முதலமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். சோனியா காந்தி பிறந்த நாளையொட்டி கேக் வெட்டி கொண்டாடிய நாராயணசாமி மகளிரணி தொண்டர்களுக்கு வெங்காயம் அடங்கிய பரிசுகளை வழங்கினார்.

 

தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய நாராயணசாமி வெங்காய விலை உயர்வை மத்திய அரசு கண்டுகொள்ளாதது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon