--- --:--:-- --

தேவையற்ற தொலைபேசி அழைப்புகள் வருவதில் இந்தியாவுக்கு 5ஆவது இடம்

14

தேவையற்ற தொலைபேசி அழைப்புகள் அதிகம் வருவதில் சர்வதேச அளவில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதுதொடர்பாக ட்ரூகாலர் நிறுவனம் வெளியிட்டுள்ள விவரங்களில், தேவையற்ற தொலைபேசி அழைப்புகள் அதிகம் வருவதில் இரண்டாவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

இருப்பினும் இந்தியாவில் ஒவ்வொரு செல்போன் பயன்பாடு அவர்களுக்கும் மாதத்திற்கு செல்போன்கள் மூலம் 26 தேவையற்ற அழைப்புகள் வருவதாக ட்ரூகாலர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

தேவையற்ற தொலைபேசி அழைப்புகள் அதிகம் வருவதில் பிரேசில் மீண்டும் முதலிடத்தில் இருப்பதாகவும், இந்தோனேசியா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இரண்டு மூன்று மற்றும் நான்காவது இடங்களில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon