ஒரு கிலோ நகையை போலீசார் சுருட்டிவிட்டனர் :சுரேஷ் பகீர் புகார்

திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளில் ஒரு கிலோ தங்கத்தை போலீசார் சுருட்டி விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பகீர் புகார் அளித்திருக்கிறார்.

 

திருச்சி லலிதா ஜூவல்லரி நகை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ்வேறொரு வழக்கு தொடர்பாக திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவரை போலீசார் மீண்டும் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

 

அப்போது தன்னிடம் இருந்த ஐந்து கிலோ 700 கிராம் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்துவிட்டு 4 கிலோ 700 கிராம் நகைகளை மட்டுமே பறிமுதல் செய்வதாக கூறுவதாக சுரேஷ் புகார் தெரிவித்தார். ஒரு கிலோ நகைகளை போலீசார் சுருட்டி விட்டதாக செய்தியாளரிடம் சுரேஷ் கூறினார்.


Leave a Reply