பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு மருத்துவரை மிரட்டிய சாம்பார் பிரகாஷ் !
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக சிறை காவலர்கள் அழைத்து வந்த கைதி ஒருவர் தனது கழுத்தை பிளேடால் அறுத்துக்கொண்டு மருத்துவரை மிரட்டும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சாம்பார் பிரகாஷ் என்ற ரவுடியை போலீசார் கொலை முயற்சி, வழிப்பறி சம்பவங்கள் தொடர்பாக கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்ட ரவுடி பிரகாஷுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரை சிகிச்சைக்காக சிறைக்காவலர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அங்கிருந்த பிளேடை எடுத்துக் கொண்டு தனது கழுத்தை தானே அறுத்துக்கொண்டு திடீர் மிரட்டலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




